எக்ஸல் பொறியியல் கல்லூரியில் – “ஒரு நாள் கருத்தரங்கம்”

எக்ஸல் பொறியியல் கல்லூரியில் – “ஒரு நாள் கருத்தரங்கம்”

Campus Drive

எக்ஸல் பொறியியல் கல்லூரியில் – “ஒரு நாள் கருத்தரங்கம்”

எக்ஸல் பொறியியல் கல்லூரியில் – “ஒரு நாள் கருத்தரங்கம்

எக்ஸல் பொறியியல் கல்லூரி தமிழ் மன்றத்தின் சார்பில், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் மு. நடராஜன் அவர்களின் ஒருங்கிணைப்பில், 2025,  செப்டம்பர் 2ஆம் தேதி அன்றுமாணவர்கள் வழி ஆளுமை: அம்பேத்கர்என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தொடர்ந்து வேதியியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் . சிவகுமார் அவர்கள், முதல்வர், சிறப்பு விருந்தினர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினரை வணிக மேலாண்மைவியல் துரை உதவிப்பேராசிரியர் முகமது முஸ்தபர் அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

நிகழ்வின் சிறப்பு விருந்தினர் எக்ஸல் பாலிடெக்னிக் கல்லூரி  அறிவியல் மற்றும் மானுடவியல் துறைத் தலைவர்  கே. முருகன் அவர்கள் கலந்து கொண்டு, மாணவர்கள் எவ்வாறு சமூக ஆளுமையாக உருவெடுக்கலாம் என்பதை வலியுறுத்தும் வகையில் ஆற்றிய உரை, மாணவர்களிடையே பெரும் ஊக்கத்தை ஏற்படுத்தியது.

இதில் சுமார் 160க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்வின் இறுதியில், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் மு. நடராஜன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். பின்னர் நாட்டுப்பண் இசை ஒலிக்க, நிகழ்ச்சி இனிதாக முடிவடைந்தது.