அறிவியல் மற்றும் மானுடவியல் துறை மற்றும் தமிழ் மன்றம் இணைந்து நடத்திய ஒருநாள் கருத்தரங்கம்
அறிவியல் மற்றும் மானுடவியல் துறை மற்றும் தமிழ் மன்றம் இணைந்து நடத்திய ஒருநாள் கருத்தரங்கம்
அறிவியல் மற்றும் மானுடவியல் துறை மற்றும் தமிழ் மன்றம் இணைந்து நடத்திய ஒருநாள் கருத்தரங்கம்
எக்ஸல் பொறியியல் கல்லூரியில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு அறிவியல் மற்றும் மானுடவியல் துறை மற்றும் தமிழ் மன்றம் இணைந்து ஒருநாள் (21.02.2024) கருத்தரங்கம் முனைவர் மு.நடராஜன் உதவிப்பேராசியர்/தமிழ் ஒருங்கிணைப்பில் நடைப்பெற்றது. இன்று காலை 10.30 மணியளவில் தமிழ் தாய் வாழ்த்துடன் துவங்க, முனைவா் ந.பிரவு இயற்பியல் துறை தலைவா் அனைவரையும் வரவேற்றார். அதன் பின் அறிவியல் மற்றும் மானுடவியல் துறை தலைவர் முனைவர் கோ.கதிரேசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கி விருந்தினரை சிறப்புசெய்தார். அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர் முனைவர் க.சிவராஜ் அவர்கள் கலந்துக்கொண்டு மாணவா்களுக்கு “வெற்றிக்கு வயதில்லை” என்ற தலைப்பில் பல்வேறு கருத்துகளை முன்வைத்து சிறப்புரை வழங்கினார். சுமார் 210 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் இறுதியாக ஆங்கில துறையின் ஒருங்கிணைப்பாளர் முனைவா் ந.சரவணன் அவர்கள் நன்றி கூறினார்