தமிழ்த்துறை மூலிகைக் கண்காட்சி

தமிழ்த்துறை மூலிகைக் கண்காட்சி

image001

தமிழ்த்துறை மூலிகைக் கண்காட்சி

எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக மூலிகை கண்காட்சி 04.09.2024 ஆம் நாள் வெகுசிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டது.  கல்லூரியின் முதல்வர் முனைவர் ரா.விமல்நிஷாந் தலைமையிலும், புலம் முதன்மையர் முனைவர் மஞ்சுளா, உள்தர மதிப்பீட்டுப் பிரிவின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர்சங்கர், தமிழ்த்துறை தலைவர் ஜெ.கோபி.கிருஷ்ணா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் 300-க்கும் மேற்பட்ட இயற்கை மூலிகைகளான கரிசலாங்கண்ணி, அதிமதுரம், சொடக்கு சப்பாத்திக்கள்ளி, பிரண்டை, நித்தியகல்யாணி, மணத்தக்காளி, கீழாநெல்லி, தும்பைபூ உள்ளிட்ட பல்வேறு மூலிகைசெடி, கொடிகள் மற்றும் பழவகைகள் காட்சிப்படுத்தப்பட்டது. நிகழ்விற்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள் திரு.ரகு, திரு.வெங்கடேஷ், திருமதிகவிதா, திருமதி.சுபஸ்ரீ மற்றும்த மிழ்த்துறை மாணவமாணவியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.