
எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை தாய்மொழி தின விழா [வீதி நாடகம்]
எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை தாய்மொழி தின விழா [வீதி நாடகம்]
எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக உலக தாய்மொழி தின விழா 21.2.25 ஆம் நாள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வானது எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ரா.விமல் நிஷாந், IQAC சிறப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் தி.ஷங்கர், புலம் முதன்மையர் முனைவர் கே.மஞ்சுளா ஆகியோர் தலைமையிலும் தமிழ்த்துறை தலைவர் முனைவர் ஜெ.கோபி கிருஷ்ணா முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் தாய் மொழியின் தேவை, தமிழ் மொழியின் சிறப்பு குறித்த வீதி நாடகம் தமிழ்த்துறை மாணவர்களால் அரங்கேற்றம் செய்யப்பட்டது. தொடர்ச்சியாக 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களால் தாய்மொழி அவசியம் குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.