
எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் மாணவர் உரை
எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் மாணவர் உரை
எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக முன்னாள் மாணவர் உரை 12.02.25 ஆம் நாள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வானது எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ரா.விமல் நிஷாந், IQAC சிறப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் தி.ஷங்கர், புலம் முதன்மையர் முனைவர் கே.மஞ்சுளா தலைமையிலும், தமிழ்த்துறை தலைவர் முனைவர் ஜெ.கோபிகிருஷ்ணா முன்னிலையிலும் துவங்கியது. தமிழ்த்துறை பேராசிரியர் சி.ரகு வரவேற்புரை நல்கினார்.சிறப்பு அழைப்பாளராக 2021- 2024 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவி செ.ஷாலினி தான் தற்போது பயிலும் வழக்கறிஞர் துறை பற்றியும், மாணவர்களுக்கு உயர் கல்வியின் அவசியம் குறித்தும் சிறப்புரை ஆற்றினார். நிகழ்வு நிறைவாக தமிழ்த்துறை பேராசிரியர் கார்த்தி நன்றியுரை வழங்கினார்