Chairman

Chairman Tamil

Screenshot 2023-06-19 154417

Prof. Dr.A.K. Natesan

M.Com., M.B.A., M.Phil., Ph.D., DSADP, DLI., FTA.
District Governor, RI District 2982, 2019-20
ARRFC – 2023-24
The First AKS Member of Rotary District 2982 & 2981
Hon. Chairman, Excel & The Kavery Group Institutions

Prof. Dr. A.K. நடேசன் அவர்கள் உயர் கல்வித்துறையில் ஒரு சிறந்த நிர்வாகி, தொலைநோக்குப்பார்வை கொண்ட இவர் ரோட்டரி மாவட்டம் 2982-ன் மாவட்ட ஆளுநராக 2019-20ஆம் ண்டிற்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்று பணியாற்றினார்.

கல்வி: Rtn.A.K. நடேசன் அவர்கள் ஒரு முனைவர் பட்டம் பெற்றவர். Doctorate in Financial Management (Coimbatore Bharathiyar University, MBA – at NIT / REC, Tiruchirapalli, உயர்க் கல்வித்துறையில் பேராசிரியராகவும், நிர்வாகியாகவும். செயல்தலைவராகவும் 39 ஆண்டுகளாகப் பணிபுரிந்துகொண்டிருக்கம் அனுபவஸ்தர்.

பதவிகள்:

  • குமாரபாளையம் எக்ஸல் கல்விக் குழுமம் மற்றும் சேலம் காவிரி கல்வி நிறுவனங்களின் கௌவரவ தலைவராவார்.
  • சிண்டிகேட் உறுப்பினர் – தமிழ்நாடு கல்வியியல் கல்லூரி பல்கலைகழகம்.
  • கோவை அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள கல்லூரிகளின் கூட்டமைப்பின் சங்கத்தின் செயலாளர்.
  • தமிழ்நாடு பால் பேட்மின்டன் சங்கத்தின் (TNBBA) மாநில தலைவர்.
  • அகில இந்திய பூப்பந்தாட்ட கழக சம்மேளனத்தின் உதவித்தலைவர்.

Activities:
இவர் பொறியியல் கல்லூரிகள், பிசினஸ் ஸ்கூல், ஆர்க்கிடெக்சர் கல்லூரி, வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, B.Ed./M.Ed. College, இயற்கை வைத்தியம் & யோகா மருத்துவக் கல்லூரி, சித்தா மருத்துவ கல்லூரி, ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, பார்மசி, பிசியோதெரபி, நர்சிங் கல்லூரிகள், அலைட்மெடிக்கல் சயின்ஸ் கல்லூரி, பலதுறை மருத்துவமனை, பப்ளிக் பள்ளி மற்றும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு அகாடமி ஆகியவைகளைத் துவக்கி சுமார் 21 கல்லூரிகளை நடத்தி வருகிறார். எக்ஸல் கல்லூரிகள் 126 ஏக்கர் நிலப்பரப்பிலும், தி காவிரி கல்வி நிறுவனங்கள் 32 ஏக்கர் நிலப்பரப்பில், 25 லட்சம் சதுரஅடி கட்டிடங்களில் நல்ல சுற்றுப்புறச்சூழலில் சிறப்பாக செயல்படுகின்றன.

குமாரபாளையம் எக்ஸல் கல்வி குழுமம் மற்றும் மேச்சேரி தி காவிரி கல்வி நிறுவனங்கள் ஆகிய 2 வளாகத்தில் 1400க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் பணிபுரிகிறார்கள். இதில் சுமார் 17,500 மாணவ, மாணவியர்கள் கல்வி பயில்கிறார்கள்.

கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் மூலம் ஆண்டிற்கு சுமார் ரூபாய். 100/- கோடி வரை பரிவர்த்தனை செய்தும், சோலார் மின்சாரம் தயாரிப்பினை எக்ஸல் என்விரோ எனர்ஜி லிமிடெட் மூலம் திட்டமிட்டு இவரது குடும்பத்தினர் செயலாற்றி வருகிறார்கள்.

Awards:
Dr.A.K. நடேசன் அவர்களுக்கு பல அமைப்புகளிலிருந்து பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இவர் பேராசிரியராக பணியாற்றியபோது மாநிலத்தின் சிறந்த NSS (National Service Scheme) அலுவலர் விருது 2 முறை தமிழ்நாடு அரசால் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை கொங்கு அறக்கட்டளையின் சார்பில் “காளிங்கராயன் விருதும்” கிடைக்கப் பெற்றுள்ளார்.

  • குமாரபாளையம் சங்கத்தில் தந்தை பெயரில் உறுப்பினர் கூட்ட அரங்கம்.
  • இவரது தலைமையில் சங்கத்திற்கு சொந்த கட்டிடம், A/C வசதியுடன் திருமணகூடம்.
  • குமாரபாளையம் மின்மயான நிர்வாக கெளரவத்தலைவர்.
  • ஆண்டுதோறும் சங்கசேவை பணிகளுக்காக சிறப்பு நன்கொடை என பங்காற்றி வருகிறார்.

இவர் கவர்னராக பணியாற்றியபோது,

  • மாவட்டத்தில் இருந்த 3600 உறுப்பினர்களுக்கும் District Directory-ஐ முதல் முறையாக வழங்கினார்.
  • ரோட்டரி பவுண்டேஷனிற்காக 5.45 லட்சம் யு.எஸ். டாலரை மாவட்டத்திலிருந்து பெற்றுத் தந்துள்ளார்.
  • இவரது குடும்பம், ரோட்டரி மாவட்டம் 2982 & 2981 முதல் AKS உறுப்பினராகி, அந்த ஆண்டே முழு நன்கொடையான
    2,50,000/- அமெரிக்க டாலரை வழங்கி, AKS (Arch Klumph Society) உறுப்பினரானார்கள்.
  • 9 பன்னாடு நிதி திட்டங்களின் கீழ் 6.50 லட்சம் யு.எஸ். டாலரை நிதியாக பெற்று கொரனா மருத்துவ உபகரணங்கள்.
    குமாரபாளையம், ஒசூர் மற்றும் நாமக்கல்லில் 3 ரோட்டரி டயாலிஸிஸ் சென்டர்கள் அமைத்ததுடன், அரசு உயர் பள்ளிகளுக்கு 1200 டெஸ்க் பெஞ்சுகளையும் வழங்கியதுடன், ராசிபுரம் சங்கத்தின் சார்பாகவும் 108 கறவை மாடுகளையும் வழங்கினார்கள்.
  • 2 புதிய பெண்களுக்கான சங்கங்களை ஆரம்பித்து நன்கு செயல்பட வழிகாட்டினார்.
  • ஈரோடு கோவிட் மருத்துவமனைக்கு தமது குடும்பத்தின் சார்பாக முதலில் ரூபாய் பத்துலட்சம் வழங்கி, தமது மாவட்ட
    உறுப்பினர்களிடமிருந்து சுமார் 1 கோடி நன்கொடையை ஒருமணிநேரத்தில் ரோட்டரி பவுண்டேஷனிற்கு
    PDG. Rtn. டாக்டர் சகாதேவன், PDG. Rtn. சிவசங்கரன், PDG. வெங்கடேசன் உடன் இணைந்து மாவட்டம்
    3203விற்கு வழங்கினார்.
  • ஆண்டுதோறும் எக்ஸல், தி காவிரி கல்லூரிகளின் சார்பாக “Project Blue” (Basics of Leaming with Uniform Education)
    மூலமாக அரசு பள்ளிகளுக்கு ரூபாய் 15 லட்சம் அளவில் டெஸ்க் பெஞ்சுகளை வழங்கி வருகிறார்.
  • இவர் 2022-23ம் ஆண்டில் மாவட்ட பயிற்றுனர் ஆகவும், 2023-24ம் ஆண்டு மாவட்டம் 3203 (திருப்பூர், ஈரோடு பகுதி மற்றும் 2982 மாவட்டங்களுக்கு ARRFC – பண்ணாட்டு ரோட்டரி மண்டல உதவி பவுண்டேசன் சேர்மேன் ஆக உள்ளார்.
  • மகிழ்மதி 2019 – மாவட்ட மாநாட்டினை தனது கல்லூரி வளாகத்தில் மிக பிரம்மாண்டமாக நடத்தி அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றார்.
  • 2022- 23ம் ஆண்டு மாவட்ட பயிற்றுனராக, புதிய பரிமாணத்தில் PET & SETS பயிற்சி பட்டறைகளும், மற்ற பயிற்சி
    நிகழ்வுகளையும் சிறப்பாக நடத்தி மாவட்டத்தின் Bench Mark ஐ உயர்த்தினார்.
  • Leader Lead by Example, Transparency in Administration, சாதாரண மாணவர்களும் சாதிக்கலாம் என்ற கோட்பாடுகள்
    இவரது தனிச்சிறப்பு. இதனை முடிந்தவரை கடைபிடித்து, பொதுவாழ்வில் முடிந்ததை சமுதாயத்திற்கு
    அளித்து வருகிறார்.

 

Rtn.A.K. நடேசன் அவர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்து பல பல்கலைக்கழகங்களை பார்வையிட்டுள்ளார். அமெரிக்கா, அர்ஜெண்டினா, ஸ்ரீலங்கா, மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், அரபு நாடுகள், நேபாளம், பூட்டான், பங்களாதேஷ், ஹாங்காங், மக்காவ், பிரிட்டன் முதலிய நாடுகளுக்கும் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் விஜயம் செய்துள்ளார்.

குடும்பம்:
இவரது மனைவி திருமதி. பார்வதி நடேசன் அவர்கள் ஸ்ரீரெங்கசுவாமி கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர். இவரது மகன் Rtn. Major Donor N. மதன்கார்த்திக் ஒரு மருத்துவர் மற்றும் எக்ஸல் & தி காவிரி கல்வி நிறுவனங்களின் உதவித்தலைவர். இவரது மருமகள் திருமதி. M. கவியரசி அவர்கள் ஒரு MBA பட்டதாரி, இவர் எக்ஸல் பப்ளிக் பள்ளியினை நிர்வகிக்கிறார். பேத்திகள் ஈசானா மற்றும் ஈசான்வி இருவரும் குடும்பத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவர் மற்றும் இவரது குடும்பத்தினர் ரோட்டரி பவுண்டேஷனிற்காக இதுவரை 3 லட்சத்திற்கும் மேல் அமெரிக்க டாலர்களை நன் கொடையாக வழங்கி மாவட்டம் 2982 – 2981 மாவட்டத்தின் முதல் AKS – Arch Klumph Society Member ஆக ஆகியுள்ளார்கள்.

Natesan

HON.CHAIRMAN

Prof.Dr.A.K.Natesan, MCom,MBA, MPhil, PhD, FTA, PHF

ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு ரோட்டேரியன் பேராசிரியர் முனைவர் ஏ.கே.நடேசன், தலைவர் எக்ஸல் குழும நிறுவனங்கள் அவர்களின் வாழ்க்கை குறிப்பு

முனைவர் ஏ.கே.நடேசன் தொலைநோக்கு பார்வை கொண்ட உயர் கல்வி நிர்வாகி. 2019-2020 ஆண்டுக்கான ரோட்டரி மாவட்ட ஆளுநர் பொறுப்பிலும், எக்ஸல் கல்விக்குழுமங்கள் மற்றும் தி காவிரி கல்வி நிறுவனங்களின் கவுரவத்தலைவராகவும் இருக்கிறார். மேலும் இவர் இந்திய தொழில்நுட்பக்கல்விக் கழக தமிழ்நாடு தலைவராகவும், தமிழ்நாடு பூப்பந்தாட்டக்கழக தலைவராகவும்(2016-2020) உள்ளார். தவிரவும் குமாரபாளையம் ரோட்டரி அறக்கட்டளை தலைவராகவும், ரோட்டரி சமுதாய கூடம்,எரியூட்டும் மையம் ஆகியவற்றினை நிர்வகிப்பவராகவும் இருக்கிறார்.

தொழில் அனுபவம் மற்றும் விருதுகள்:

இவர் தனது வாழ்நாளில் 4 பொறியியல் கல்லூரிகள், பிசினஸ் கல்லூரி, ஆர்க்கிடெக்சர் கல்லூரி, 3 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகள ஆரம்பித்துள்ளார். இவற்றில் சுமார் 1000 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்;றுகின்றனர். குமாரபாளையம் எக்ஸல், மேச்சேரி தி காவிரி கல்வி நிறுவன வளாகங்களில் 13 ஆயிரம் மாணவ,மாணவிகள் கல்வி பயில்கிறார்கள்.

ஒரு சமூக அக்கறையுள்ள பேராசிரியரான இவரால் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் குழந்தை தொழிலாளர் தவிர்ப்பு பள்ளி நடத்தப்பட்டது. இவர் ரோட்டரி அமைப்பில் சங்கத்தலைவர், உதவி ஆளுநர், பயிற்சியாளர், மாவட்ட தலைவர் என பல்வேறு பதவிகளை 2002-ம் ஆண்டு முதல் வகித்து வருகிறார். தற்போது 2982 ரோட்டரி மாவட்ட எழுத்தறிவு இயக்கத்தலைவராக இருந்து வருகிறார். 2019-2020-ம் ஆண்டுக்கான ரோட்டரி ஆளுநர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முனைவர் ஏ.கே.நடேசன் நிதி நிர்வாகம் குறித்த தனது ஆய்வின் மூலம் டாக்டர் பட்டம் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பெற்றார். தனது எம்.பி.ஏ. முதுகலை பட்டத்தினை திருச்சி மண்டல பொறியியல் கல்லூரி என்றழைக்கப்பட்ட தற்போதைய தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் முடித்தார். இவர் உயர்கல்வித்துறையில் 32 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். முனைவர் ஏ.கே.நடேசன் மிக உயரிய விருதுகள் பலவற்றையும், பல்வேறு அமைப்புகளிடம் இருந்து பெற்று சாதனை படைத்துள்ளார்;. இது தவிர தமிழக அரசிடம் இருந்து 2 முறை மாநிலத்தில் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விருதினையும் பெற்றுள்ளார்.

குடும்ப வாழ்க்கை

இவரது மனைவி ரோட்டேரியன் என்.பார்வதி. இவர் ஸ்ரீரெங்கசாமி கல்வி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவரது ஒரே மகன் டாக்டர் என்.மதன்கார்த்திக், இவர் மருத்துவத்துறையில் இளங்கலை பட்டம், முதுகலை மருத்துவ அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். மேலும் இவர் எக்ஸல் மற்றும் காவிரி கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவராகவும் உள்ளார். இவரது மருமகள் திருமதி எம். கவியரசி, பேத்தி பேபி ஈசனா என மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையில் இருக்கிறார்;.

முனைவர் ஏ.கே.நடேசன் அமெரிக்கா, அர்ஜென்டினா, இங்கிலாந்து, இலங்கை, மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள், நேபாளம், பூட்டான், வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களை பார்வையிட்டுள்ளார்.

முனைவர் ஏ.கே.நடேசன் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பால் ஹாரிஸ் குடும்பம் என்ற தகுதியினை பெற்றுள்ளனர். இவர்கள் சார்பாக இதுவரை 28 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக ரோட்டரி பவுன்டேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.