Chairman-tamil
Chairman
The Founder
Prof. Dr. A.K. Natesan, MCom, MBA, MPhil, PhD, FTA, PHF
ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு ரோட்டேரியன் பேராசிரியர் முனைவர் ஏ.கே.நடேசன், தலைவர் எக்ஸல் குழும நிறுவனங்கள் அவர்களின் வாழ்க்கை குறிப்பு
முனைவர் ஏ.கே.நடேசன் தொலைநோக்கு பார்வை கொண்ட உயர் கல்வி நிர்வாகி. 2019-2020 ஆண்டுக்கான ரோட்டரி மாவட்ட ஆளுநர் பொறுப்பிலும், எக்ஸல் கல்விக்குழுமங்கள் மற்றும் தி காவிரி கல்வி நிறுவனங்களின் கவுரவத்தலைவராகவும் இருக்கிறார். மேலும் இவர் இந்திய தொழில்நுட்பக்கல்விக் கழக தமிழ்நாடு தலைவராகவும், தமிழ்நாடு பூப்பந்தாட்டக்கழக தலைவராகவும்(2016-2020) உள்ளார். தவிரவும் குமாரபாளையம் ரோட்டரி அறக்கட்டளை தலைவராகவும், ரோட்டரி சமுதாய கூடம்,எரியூட்டும் மையம் ஆகியவற்றினை நிர்வகிப்பவராகவும் இருக்கிறார்.
தொழில் அனுபவம் மற்றும் விருதுகள்:
இவர் தனது வாழ்நாளில் 4 பொறியியல் கல்லூரிகள், பிசினஸ் கல்லூரி, ஆர்க்கிடெக்சர் கல்லூரி, 3 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகள ஆரம்பித்துள்ளார். இவற்றில் சுமார் 1000 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்;றுகின்றனர். குமாரபாளையம் எக்ஸல், மேச்சேரி தி காவிரி கல்வி நிறுவன வளாகங்களில் 13 ஆயிரம் மாணவ,மாணவிகள் கல்வி பயில்கிறார்கள்.
ஒரு சமூக அக்கறையுள்ள பேராசிரியரான இவரால் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் குழந்தை தொழிலாளர் தவிர்ப்பு பள்ளி நடத்தப்பட்டது. இவர் ரோட்டரி அமைப்பில் சங்கத்தலைவர், உதவி ஆளுநர், பயிற்சியாளர், மாவட்ட தலைவர் என பல்வேறு பதவிகளை 2002-ம் ஆண்டு முதல் வகித்து வருகிறார். தற்போது 2982 ரோட்டரி மாவட்ட எழுத்தறிவு இயக்கத்தலைவராக இருந்து வருகிறார். 2019-2020-ம் ஆண்டுக்கான ரோட்டரி ஆளுநர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முனைவர் ஏ.கே.நடேசன் நிதி நிர்வாகம் குறித்த தனது ஆய்வின் மூலம் டாக்டர் பட்டம் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பெற்றார். தனது எம்.பி.ஏ. முதுகலை பட்டத்தினை திருச்சி மண்டல பொறியியல் கல்லூரி என்றழைக்கப்பட்ட தற்போதைய தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் முடித்தார். இவர் உயர்கல்வித்துறையில் 32 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். முனைவர் ஏ.கே.நடேசன் மிக உயரிய விருதுகள் பலவற்றையும், பல்வேறு அமைப்புகளிடம் இருந்து பெற்று சாதனை படைத்துள்ளார்;. இது தவிர தமிழக அரசிடம் இருந்து 2 முறை மாநிலத்தில் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விருதினையும் பெற்றுள்ளார்.
குடும்ப வாழ்க்கை
இவரது மனைவி ரோட்டேரியன் என்.பார்வதி. இவர் ஸ்ரீரெங்கசாமி கல்வி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவரது ஒரே மகன் டாக்டர் என்.மதன்கார்த்திக், இவர் மருத்துவத்துறையில் இளங்கலை பட்டம், முதுகலை மருத்துவ அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். மேலும் இவர் எக்ஸல் மற்றும் காவிரி கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவராகவும் உள்ளார். இவரது மருமகள் திருமதி எம். கவியரசி, பேத்தி பேபி ஈசனா என மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையில் இருக்கிறார்;.
முனைவர் ஏ.கே.நடேசன் அமெரிக்கா, அர்ஜென்டினா, இங்கிலாந்து, இலங்கை, மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள், நேபாளம், பூட்டான், வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களை பார்வையிட்டுள்ளார்.
முனைவர் ஏ.கே.நடேசன் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பால் ஹாரிஸ் குடும்பம் என்ற தகுதியினை பெற்றுள்ளனர். இவர்கள் சார்பாக இதுவரை 28 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக ரோட்டரி பவுன்டேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.